தேவையான பொருட்கள்:
முட்டை – 3
சேமியா – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நீர் நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின் அந்த நீரில் சேமியாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வத்க்கி இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வதக்கி வைத்துள்ள பொருட்கள் மற்றும் வேக வைத்துள்ள சேமியாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் ஊற்றி, தோசை போன்று பரப்பி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை சேமியா தோசை தயார்.