சென்னை: சுவையான கும்பகோணம் கொஸ்து தயார் செய்வது குறித்து இதோ உங்களுக்காக.
தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – 1 கப், பச்சைப் பயறு – 2 ஸ்பூன், வேர்கடலை – 2 ஸ்பூன், கொள்ளு – 2 ஸ்பூன், தக்காளி – 2, பச்சை மிளகாய் – 4, கத்தரிக்காய் – 2, காய்ந்த மிளகாய் – 2, கடுகு -அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சீரகம் – கால் ஸ்பூன், சாம்பார் பொடி – 1 ஸ்பூன், நெய்- ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பயறு வகைகளை முதல் நாளே ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்த பருப்புடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் போட்டு இறக்கவும்.
வெந்த கலவையை மத்தால் மசித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார்.