சென்னை: மாலை நேரத்தில் பிரெட்டில் புட்டு செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
மிருதுவான இனிப்பு பிரெட் – 5 துண்டுகள்
தேங்காய் துருவல் – 5 தேக்கரண்டி
சர்க்கரை – 5 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
முந்திரி – 6
ஏலக்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை: பிரெட் துண்டின் ஓரங்களை வெட்டி நீக்கி, பின்னர் தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டு பிரெட்டின் இரண்டு பக்கமும் லேசாக புரட்டி சூடாக்கவும்.
சூடாக்கிய பிரெட்டை துண்டுகளாக்கி மிக்ஸிலில் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடியக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
சர்க்கரை இளகி பாகு போல் வந்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடியாக்கி வைத்துள்ள பிரெட் தூளைப் போட்டு சிறிது நெய் சேர்த்து கிளறி உதிரியாக வந்தவுடன் இறக்கி விடவும். முந்திரியை சிறிது நெய் விட்டு வறுத்து பிரெட்டில் தூவி பரிமாறவும்.