சென்னை: மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொறுத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.
தேவையான பொருட்கள் :
புளிக்காத தயிர் : 1 கப்
இனிப்பான மாம்பழம் : 1
கடலை மாவு : 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் : கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் : கால் டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் துருவல் : அரை டீஸ்பூன்
எண்ணெய் : 2 டீஸ்பூன்
செய்முறை : தயிருடன் உப்பு , பெருங்காயத்தூள் , அரை கப் தண்ணீர் , மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள், மாம்பழத்தை தோல் , கொட்டை நீக்கி கையால் லேசாக பிசைந்து தயிருடன் சேருங்கள்.
அரைத்த பொருட்களை ஒன்றாக அரைத்து அதனுடன் சேருங்கள். எண்ணெய்க் காய வைத்து கடுகு தாளித்து மோர் , மாம்பழ கரைசலை சேர்த்து கொதி வந்ததும் இறக்குங்கள். இப்போது சுட சுட கமகம என வாசனை வீசும் மாம்பழ குழம்பு தயார்..!!