சென்னை :பட்டர் பீன்ஸில் இருக்கும் கால்சியம், புரோட்டின், நார்சத்து காரணமாக உடலில் தேங்கியுள்ள அளவுக்கு அதிகமான கொழுப்புகள் உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது. உடலுக்கு சத்துக்களை வழங்கி, தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும் பட்டர் பீன்ஸ் சுண்டல் செய்வது எப்படி என இனி காணலாம்.
தேவையான பொருட்கள் :
பட்டர் பீன்ஸ் – 1 கிண்ணம்,
சோம்பு – கால் கரண்டி,
கரம் மசாலாத்தூள் – அரை கரண்டி,
தேங்காய் துருவல் – கால் கிண்ணம்,
இஞ்சித் துருவல் – 1 கரண்டி அளவு,
எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட பட்டர் பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சோம்பு, கறிவேப்பில்லை, இஞ்சி துருவல் ஆகியவற்றை கொட்டி தாளிக்க வேண்டும்.
இதனோடு பட்டர் பீன்ஸ், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, மசாலா வாசம் நீங்கியதும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பட்டர் பீன்ஸ் சுண்டல் தாயார்.