முல்லைத்தீவு: முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தலை முடித்துக்கொண்டு திரும்பிய மக்கள் கடும் வாகன நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து வெளியேறும் வழி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் சந்தித்துக் கொள்ளும் போது இந்த வாகன நெருசல் ஏற்பட்டுள்ளது.
இருவழி பாதையான இந்த வீதி A35 வீதியில் மக்கள் நடந்து செல்வதிலும் கூட சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளனர். அதாவது சிறிய தூரத்தை கடந்து செல்ல பல நிமிடங்கள் எடுத்துக் கொள்வதாக குறிப்பிடப்படகின்றது.
வெய்யில் அதிகமாக உள்ள இந்த சூழலிலும் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு படையெடுத்து வருகின்றனர்.