தஞ்சாவூர்: மண்ணில் கூட ஒரு மாசு படக்கூடாது என்கிற நன்னோக்கோடு, 20 ஆண்டுகாலமாக விவசாயத்தில் நான் ரசாயனமே போடுவதில்லை என்று பாபநாசம் சட்டமன்ற ொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர், இயற்கை விவசாயி அரு சீர். தங்கராசு மக்களிடம் தான் மேற் கொண்ட பணிகள் குறித்து விளக்கி கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார்.
அதிதீவிரமான முறையிலே மக்கள் பணியைத் தொடர்ந்து 20 ஆண்டுகாலமாக நாங்கள் செயலாற்றி வருகிறோம். இருந்தாலும், இப்பொழுது கடந்த 2020-லிருந்து ரொம்ப மக்கள் பணிக்கு வந்து என்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறேன். மரங்கள் நடுவது, மதுபானக் கடைகள் அங்கங்கே தீமைகளை நீக்குவதற்கு ஏற்பாடு செய்வது, வேளாண் முகாம்கள் நடத்துவது எனப் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து வீரியமான முறையில் செய்து வருகிறேன்.
இதனுடைய அடிப்படையில்தான் இன்னைக்கு வந்து 2026 சட்டமன்றத் தேர்தல்ல ‘காவிரித் தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம்’ சார்பாகவும், இந்தப் பணியை ஒரு அரசியல் தளத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நன்னோக்கோடு இந்தச் சட்டமன்றத் தேர்தலில் நான் நிற்கிறேன். என்னுடைய பகுதியான பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தான் நாம நிற்க முடியும் என்ற ஒரு நிலை நிர்ப்பந்தத்தால் இந்தத் தேர்தலில் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.
இது மூலமாக நாம் தொடர்ந்து மக்கள் பணி செய்வதற்கு ஒரு ஆயத்தமான அடையாளமாக இருக்கும் என்பதுதான் நமது நோக்கம். இந்தத் தேர்தலில் என்னைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
மண்ணில் கூட ஒரு மாசு படக்கூடாது என்கிற நன்னோக்கோடு, 20 ஆண்டுகாலமாக விவசாயத்தில் நான் ரசாயனமே போடுவதில்லை. அப்புறம் ஏரி, குளங்களை அங்கங்கே பனை மரங்களையும் மற்ற மரங்களையும் நட்டு, இளைஞர்களைத் திரட்டி கொண்டு போய் மாவட்ட ஆட்சியாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடைய தலைமையில், பொறுப்பில் அந்த மரங்களை நட்டு நான் பராமரித்து வருகிறேன்.
இப்படிச் செய்யக்கூடிய பணிகளை, மக்களுக்கு ஆயத்தமாக இருக்கக்கூடிய பணிகளை இன்னும் தொடர்ந்து செய்வதற்கு ஒரு காரணமாக இந்தத் தேர்தல் பணி இருக்கும். இந்தத் தேர்தலில் நிற்பதற்கு எனக்குத் துணையாக இருந்த நண்பர், நல்லோர் வட்டத்தில் இருந்த சிவசண்முகம் தான் முதன்முதலாக எனக்கு 1000 ரூபாய் கொடையாகக் கொடுத்து, ‘உங்கள் பணி சிறக்கட்டும்’ என்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
அதேபோல மற்ற நண்பர்களும் தோழர்களும் இந்த வெற்றிக்குத் துணையாக இருப்பீர்கள் என்று உங்களை அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.