May 24, 2024

ஆப்பிள் ஜாம் குட்டீஸ்களுக்கு வீட்டிலேயே சூப்பராக செய்து தாருங்கள்

சென்னை: இன்றைய அவசர உலகில் நிறைய சிற்றுண்டிகளுக்கு (டிஷ்க்கு) ஜாம் தொட்டு சாப்பிடுவதைத் தான் எல்லாரும் விரும்புகிறோம். அதுவும் ஜாம் என்றால் போதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். கடைகளில் விற்கப்படும் ஜாமில் ஏராளமான செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டுகள் போன்ற உடலுக்கு கெடுதலான விஷயங்களை சேர்க்கின்றனர்.

எனவே இதற்கு பதிலாக வீட்டிலேயே எளிதான முறையில் ஆப்பிள் ஜாம் தயாரித்து கொடுக்கலாம். ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொண்டால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 2
சர்க்கரை – 1கப்
லெமன் – 1/2 பழம்
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை: ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து 2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்.

10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்.பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.பிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும். அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். நன்றாக கிளறி ஆற விடவும்.ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!