பீகார்: பீகார் மாநில அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலில் பதிவு செய்யப்பட்ட கிரியேட்டர்களுக்கு, ஒவ்வொரு ஒரு லட்சம் பார்வைகளுக்கும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு வீடியோவுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்த பின்னர் அதன் பார்வைகள் சரிபார்க்கப்பட்டு ஊக்கத்தொகை கணக்கிடப்படும்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்க கிரியேட்டர்கள், பக்கங்கள் மற்றும் சேனல்கள் பீகார் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் பதிவு செய்து எம்பேனல் செய்யப்பட்டிருக்க வேண்டும். போலி கணக்குகள் மற்றும் செயற்கையான பார்வைகளைத் தடுக்க தணிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
