கேரளா: கொடிய குழவி, தேனீக்கள் கொட்டி உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு கேரளா அரசின் வனத்துறையானது ரூ. பத்து லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், வனப்பகுதிக்கு வெளியே இறப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
காடுகளுக்குள் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வனவிலங்குகளால் வீடு, விவசாயம், கால்நடைகளுக்கு ஏற்படும் சேதங்களை ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.