போபால்: தன்னுடன் விளையாடிய 4 வயது சிறுவனை 12 வயது சிறுமி கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
போபாலில் 12 வயது சிறுமியுடன் விளையாடிய 4 வயது சிறுவன் மாயமாகி இருக்கிறான். அதன்பின், சிறுமி முன்னுக்கு பின் முரணாக பல பதில்களை கூறியிருக்கிறார்.
சிறுவனை தேடும் பணியில் போலீசார் மூலமாக ஈடுபட்டனர். இருப்பினும் எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையே இருந்து வந்தது.
இதனையடுத்து, சிறுமியை மீண்டும் பெண் போலீசார் ஒருவர் விசாரித்தார். அந்த சினிமா மீது பெண் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சாமி வந்தது போல நாடகமாடியிருக்கிறார்.
இதனால் அச்சமடைந்த சிறுமி, சிறுவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டார். 50 போலீசார் தேடியும் கிடைக்காத சிறுவன், இறுதியில் பெண் போலீசாரின் நாடகத்தின் மூலம் பிணமாக மீட்கப்பட்டான்.
இருப்பினும் சிறுவனை தனியாக புதைக்கும் அளவிற்கு அந்த சிறுமியால் முடிந்ததா அல்லது வேறு யாராவது உதவிகள் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன் மேலும் விசாரணையை போலீசார் தொடர்ந்து வருகின்றனர்.