உத்திரப்பிரதேசம் : விடுதலை செய்யப்பட்டார்… உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குற்றவாளியாகக் கருதி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பெண் 84 நாள்களுக்குப் பிறகு நிரபராதி என உறுதி செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார்.
அவர் குற்றமற்றவர் என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்குவதற்கு, அவரின் 120 கிலோ உடல் எடைதான் காரணமாக இருந்துள்ளது.
120 கிலோ எடையுள்ள (48 வயது) பெண் மசூதியின் முகப்பு வரை ஏறிச்சென்று காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்த சாத்தியமே இல்லை என விசாரணையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.