By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை
    1 Min Read
    ரம்பூட்டான் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்
    1 Min Read
    நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விமான நிலையங்களில் இயங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > விமான நிலையங்களில் இயங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து
இந்தியா

விமான நிலையங்களில் இயங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து

Nagaraj
Last updated: May 17, 2025 3:20 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுடில்லி: விமான நிலையங்களில் இயங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவைகளை வழங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்படுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயங்கரவாத்துக்கு எதிரான இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி தனது நிலைப்பாட்டை அறிவித்தது. ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காமின் பைசாரான் பள்ளத்தாக்கில், கடந்த மாதம் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

இந்தக் கொடூர சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தன.

இந்நிலையில், இந்தியாவின் முக்கியமான 9 விமான நிலையங்களில் பயணிகள் சேவைப் பணிகளில் ஈடுபட்டுவந்த துருக்கி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை மத்திய விமான போக்குவரத்துத் துறை ரத்து செய்துள்ளது. நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி, துருக்கியைச் சேர்ந்த செலிபி கிரவுன்ட் ஹேண்டிலிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு துருக்கி மீது மத்திய அரசு எடுத்துள்ள மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர்.

இதேபோன்று, துருக்கியில் இருந்து ஆப்பிள் கொள்முதல் செய்வதற்கும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்

தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்

பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு

மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது

TAGGED:action orderairportsApple purchaseCentral GovernmentPakistan supportTurkeyஅதிரடி உத்தரவுஆப்பிள் கொள்முதல்துருக்கிபாகிஸ்தான் ஆதரவுமத்திய அரசுவிமான நிலையங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?