பெங்களூரு: ‘ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் போது, நீதிபதிகள் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சந்திரசூட் கூறியதாவது: விசாரணை நீதிமன்றங்களில் ஜாமீன் பெற வேண்டியவர்கள், அது கிடைக்காவிட்டால், உயர் நீதிமன்றங்களை அணுகுவோம். உயர் நீதிமன்றங்களில் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். இந்த தாமதம் மனுதாரர்கள் சந்திக்கும் பிரச்னையை மேலும் அதிகரிக்கிறது.
ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் போது நீதிபதிகள் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வழக்கின் உண்மைகளையும் அறிய பொது அறிவு தேவை. ஒவ்வொரு வழக்கின் நுணுக்கங்களையும் நீதிபதிகள் கவனமாக ஆராய வேண்டும். நம் முன் வைக்கப்படும் சிறு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை உச்ச நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.