லக்னோ : இந்தி நடிகை போல் இருக்க வேண்டும் என்பதற்காக மனைவியை உடற்பயிற்சிகள் செய்ய வைத்து கொடுமைகள் செய்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் சிவம் உஜ்வால். அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஷானவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் தனது மனைவி சினிமா நடிகை நோரா பதேகி போல் கட்டுடலாக உடலமைப்பை பெற வேண்டும் எனக்கூறி மனைவி ஷானவியை தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
கணவனின் வற்புறுத்தலால் ஷானவி தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். உடல் நல பிரச்சினையால் ஒரு நாள் உடற்பயிற்சி செய்ய தவறினாலும், அவருக்கு சாப்பாடு தராமல் பட்டினி போட்டார். கையில் கிடைத்த பொருட்களால் அவரை அடித்துள்ளார். மேலும் உடலளவிலும், மனதளவிலும் அவரை துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார்.
ஆபாச படங்கள் பார்த்து அந்த படங்களில் வருவதுபோல் மனைவியோடு முறையற்ற உறவில் ஈடுபட ஷானவியின் கரு கலைந்தது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஷானவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் கணவன் செய்யும் இந்த கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவரை மாமியார் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்து போன ஷானவி கணவர் வீட்டிலிருந்து வெளியேறினார்.
தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லி அழுதார். தாய், தந்தை வீட்டிலேயே இருந்து விட முடிவு செய்தார். மகளை சமாதானப்படுத்திய பெற்றோர் மீண்டும் அவளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த ஷானவியை ஏற்க மறுத்த கணவன் வீட்டார், வரதட்சணை கொண்டு வரச்சொல்லி விரட்டி விட்டனர். ஒரு கட்டத்தில் கணவன் வீட்டாரின் செயலை பொறுக்க முடியாத அவர் போலீஸ் நிலையம் சென்றார்.
போலீசாரிடம் அவர் அளித்த புகாரில், “எனது கணவர் எனக்கு விருப்பமில்லாத பல விஷயங்களை செய்ய சொல்கிறார். நடிகை போல் உடலமைப்பு பெற தினமும் 3 நேரம் உடற்பயிற்சி செய்ய சொல்கிறார். நிறைய ஆபாச படங்கள் பார்க்கிறார். நான் அதைப் பற்றி கேட்டால் உன்னை திருமணம் செய்து கொண்டதால் என் வாழ்க்கையே வீணனாது. என்னை தினமும் அடித்தும் பட்டினி போட்டும் கொடுமைப்படுத்துகிறார்.
இதனால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வீட்டில் வர தட்சணையாக அவர்கள் கேட்டபடி ரூ.24 லட்சத்தில் கார் வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல், ரூ.10 ரொக்கமாகவும் லட்சம் கொடுத்தார்கள். ஆனாலும் எனது மாமியார் உன் வீட்டிலிருந்து, நகை கொண்டு வா, பணம் கொண்டு வா என தினமும் கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார்” என்று புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
,