ஐதராபாத்: ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு சம்பந்தமாக ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜரானார்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற சட்டவிரோத செயலிகளுக்கு விளம்பரம் செய்ததாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், தேவரகொண்டா, ராணா உள்பட சுமார் 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.