புதுடில்லியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய மோதலுக்குப் பிறகு, அமெரிக்கா இருநாடுகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
பதிலடி என நினைத்து பாகிஸ்தான் அத்துமீறியதால், இந்திய விமானப்படை பாகிஸ்தானின் விமானத் தளங்களை தாக்கியது. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கேட்டதன் பேரில் இந்தியா சம்மதித்து போர் முடிவடைந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை “நான் தான் நிறுத்தினேன்” என கூறினாலும், மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இருப்பினும், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சூழலை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவதாக தெரிவித்தார். மேலும், கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையேயான நிலைகளையும் கண்காணிக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் அமலுக்கு வர, இருநாடுகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும். ரஷ்யா இதற்கு உடன்படாததால், தற்போதைய மற்றும் எதிர்காலங்களில் மோதல் இல்லாமல், நிரந்தர அமைதி நிலை பெற வேண்டும் என அவர் கூறினார்.