
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலாக, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.இந்த தாக்குதலுக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் கூறியதாவது, இந்த தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகவும் வலியடையச் செய்தது. “ஆபரேஷன் சிந்தூர்” என்பது வெறும் நடவடிக்கை அல்ல, நாட்டின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகும் என்றார்.இனி ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமத்தை அழிக்கும் எண்ணம் கூட வரக் கூடாது என்று அவர் கடுமையாக எச்சரிக்கை செய்தார். மே 6 மற்றும் 7 தேதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்திய பாதுகாப்புப் படைகள் துணிச்சலுடன் செயல் படைத்ததைக் குறிப்பிடும் மோடி, காஷ்மீரில் பயணிகள் தாக்கப்பட்ட சம்பவம் மக்களை பெரிதும் பாதித்ததாக தெரிவித்தார். இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது, ஆனால் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும் கூறினார்.பாகிஸ்தானை அதிலுள்ள பயங்கரவாதம் அழித்துவிடும் என்று மோடி சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா பொறுப்பேற்காது என்று அவர் கூறினார். எந்த சூழலிலும் இந்தியா பயங்கரவாதத்திற்கு தலைவணங்காது என்றும் அவர் உறுதியளித்தார்.பாகிஸ்தான் சமாதானத்திற்காக இந்தியாவிடம் கெஞ்சியதாகவும், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை அழித்ததாகவும் மோடி தெரிவித்தார். இந்திய ராணுவத்திற்கு அவர் தனது வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்தார்.இந்த உரை, இந்திய மக்களின் உற்சாகத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் வலிமைப்படுத்தியது.