கர்நாடகா: சிறைச்சாலையில் கைதி ஒருவர் செல்போனை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் உள்ள சிறைச்சாலையில், கைதி ஒருவர் செல்போனை விழுங்கிய நிலையில் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து வெளியே எடுக்கப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் அதிக பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஷிவமோகாவில் உள்ளது. இங்கு ஒரு கைது வயிற்று வலியால் துடிதுடித்துள்ளார். இதனால் சிறையில் உள்ள மருத்துவ ஸ்டாஃப்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தான் செல்போனை விழுங்கியதாக கைது கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாஃப்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கும்போது, மருத்துவர்கள் வயிற்றில் செல்போன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அறுவை சிசிக்சை செய்துதான் செல்போனை எடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறியதால், கைதியின் சம்மதம் பெற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு செல்போன் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
அதிக பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையில் கைதிக்கு செல்போன் கிடைத்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடா? அல்லது கூட்டு சதியா? என்பதை கண்டறிய விசாரணைக்கு உததரவிடப்பட்டுள்ளது.