By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகத்தை அதிர வைத்த தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைனின் பேர்ல் ஹார்பர் தரமான டிரோன் தாக்குதல்
    1 Min Read
    உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷ்யாவுக்கு பெரிய இழப்பு
    2 Min Read
    வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி
    1 Min Read
    சீனாவின் கடும் எச்சரிக்கை – பிரம்மபுத்திரா நதியை நிறுத்தும் அபாயம்
    1 Min Read
    இஸ்ரேல், ஹமாஸ் போருக்கு இடையே புதிய ஒப்பந்தம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத்: ரயில்வே அதிகாரிகள் திட்டம்
    2 Min Read
    திருப்பதியில் 95,080 பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம்..!!
    1 Min Read
    விண்வெளிக்குச் செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா..!!
    1 Min Read
    அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நாசிக் கும்பமேளா ஆரம்பம்..!!
    1 Min Read
    அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை: சுகாதாரத்துறை எச்சரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பழங்களை தோலுடன் சாப்பிடுவது நல்லது…. எதனால் தெரியுங்களா?
    2 Min Read
    உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டம்
    1 Min Read
    குமரியில் மீன்பிடி தடை நள்ளிரவு முதல் அமல்..!!
    1 Min Read
    கோடை விடுமுறையில் வண்டலூர் பூங்காவிற்கு 3 லட்சம் பார்வையாளர்கள் வருகை..!!
    1 Min Read
    உள்நாட்டு விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மகா கும்பமேளாவிற்கு 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > மகா கும்பமேளாவிற்கு 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை
இந்தியா

மகா கும்பமேளாவிற்கு 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

Nagaraj
Last updated: January 10, 2025 7:15 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

லக்னோ: லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மகாகும்பமேளாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக ‘மகா கும்பமேளா’ விளங்குகிறது. இந்நிலையில், ‘மகா கும்பமேளா 2025’ வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரயாக்ராஜ் நகருக்கு சாலை, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வந்து சேர்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் தேவைக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாகும்பமேளாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரயாக்ராஜ் காவல்துறை ஐ.ஜி. தருண் காபா கூறுகையில், “மகாகும்பமேளா 2025 மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இதற்காக காவல்துறை சார்பில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் சுமார் 2,700 கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்த உள்ளோம். மத்திய மற்றும் மாநில அரசின் அமைப்புகளுடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

You Might Also Like

பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத்: ரயில்வே அதிகாரிகள் திட்டம்

திருப்பதியில் 95,080 பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம்..!!

விண்வெளிக்குச் செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா..!!

அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நாசிக் கும்பமேளா ஆரம்பம்..!!

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை: சுகாதாரத்துறை எச்சரிக்கை

TAGGED:Central GovernmentKumbh MelapolicesecuritySurveillance Cameraகண்காணிப்பு கேமராகும்பமேளாபாதுகாப்பு பணிபோலீசார்மத்திய அரசு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

பழங்களை தோலுடன் சாப்பிடுவது நல்லது…. எதனால் தெரியுங்களா?

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?