கேரளா: கேரளா அம்பல வயலில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, வயநாடு அம்பலவயலில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்மில் ஆர்வமுடன் பயிற்சி செய்துகொண்டிருந்த 24 வயதான சல்மான், திடீரென மயங்கி சரிந்தார்.
உடனடியாக அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் போது இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.