சென்னை: வீட்டில் இருக்கும் பொருட்களைமுதலில் பிசுக்கை போக்க காய்ச்சாத பாலை பஞ்சில் நனைத்து முகம், கழுத்தை துடையுங்கள்.
ஈரம் காய்ந்ததும் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன் மற்றும் தேன் 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் வெளியேறும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.
கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் என எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். தற்போது கொஞ்சம் எடுத்து முகத்தில் தேய்த்து வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்களுக்கு இப்படி செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின் நீரில் கழுவி விடுங்கள்.
கடலை மாவு 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பால் – 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து நன்குக் கலக்குங்கள். முகத்தில் இந்த பேஸ்டை அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். இறுதியாக கழுவும் முன் கொஞ்சம் தண்ணீர் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்துவிட்டுக் கழுவுங்கள். அவ்வளவுதான் உங்கள் முகம் இப்பொது ஜொலிக்கும்!