சென்னை: உணவுகளை முறைபடி சமைத்தால் எந்த தொல்லைகளில் இருந்தும் தப்பிக்கலாம். என்ன விஷயம் என்கிறீர்களா?
நம்மில் ஒரு சிலருக்கு வாழைக்காய் , உருளை கிழங்கு சாப்பிட்டால் வாயுக் கோளாறு வரும் என்றும், கத்தரிக்காய் சாப்பிட்டால் அலரிஜி ஆகும் என்றும், வெள்ளரிக்காய் சாப்பிட்டால் ஈரம் என்றும் சிலர் சில ஆரோக்கியமான உணவுகளை தள்ளி வைப்பார்கள்.
உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத உணவுகளை அவர்கள் தள்ளி வைப்பதும் சரிதான்.. இந்த தொல்லைகள் சில நேரங்களில் நம்மை தாக்க கூடும். உணவுகளை முறைபடி சமைத்தால் இந்த தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம்.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் இதிலிருந்து விடுபட உணவில் அதிக அளவு மிளகு, பூண்டு சேர்த்து சமைக்கவும். சிலருக்கு உடம்பில் அலர்ஜி, அரிப்பு ஏற்படும். அப்படி அரிப்பு ஏற்படுபவர்கள் கொத்தமல்லி, முருங்கை கீரை, பீட்ரூட் போன்ற காய், கீரைகளை சேர்த்துக்கொள்ளவும்.
பித்தத்தைப் போக்க அரைக்கீரை சாப்பிடலாம். தண்ணீரில் எலுமிச்சை பழம் சாறு பிழிந்து சற்று உப்பு சேர்த்து குடிப்பது நல்லது.. கொத்தமல்லி சட்னி வைத்து சாப்பிடுவதால் பித்தம் தணியும். சிலருக்கு புளித்த ஏப்பம் வரும் அப்படியிருப்பவர்கள் சிறு துண்டு இஞ்சி, 2 வெற்றிலை, 2, 3 கல் உப்பு வைத்து உரலில் தட்டி சாறு எடுத்து குடிக்கவும்.
உடல் சூடு தணிய பசும் பால், நெய், மோர் அதிகம் சேர்க்கவும். மணத்தக்காளி கீரையும் நெய் கலந்து சாப்பிடுவதால் உடல் சூடு தணியும். மூல நோய் சூடு தணிய தண்ணீர் அதிகம் குடிக்கவும். உணவில் அகத்திக்கீரை சேர்க்கவும்.