சென்னை: தினமும் அதிகம் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்… பால், தேயிலை, சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் டீ உலகெங்கும் பரவலாக பகிரப்படும் பானமாக விளங்குகிறது. டீ பருகிவிட்டுத்தான் அன்றைய நாளை தொடங்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி ருசிக்கப்படும் டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா?
பாலில் இருக்கும் கால்சியம் எலும்புகளை கொஞ்சம் வலுவடைய செய்யும். வயதாகும்போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாட்டை தடுக்க இது உதவும். வளர்சிதை மாற்றம் சீராக இயங்க உதவும்.
மேலும் தேநீரில் இருக்கும் காபின் அதிக விழிப்புடனும், கவனத்துடனும் இருக்கச் செய்யும். தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் சிறு கவசங்கள் போன்று செயல்படும்.
டீ பருகும் விஷயத்தில் கவனமாக இருக்காவிட்டால் அதில் இருக்கும் தேயிலை உடலில் இரும்பை உறிஞ்சும் திறனை குழப்பிவிடும். இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் கண்டிப்பாக பருகக்கூடாது. டீயில் கூடுமானவரை இனிப்பு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். அது முடியாதபட்சத்தில் சிறிதளவு இனிப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
விரும்பிய நேரமெல்லாம் டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். தாகமாக இருக்கும்போதும் பருகக்கூடாது. நிறைய தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். செரிமான கோளாறு போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை சந்தித்தால் டீயை தவிர்த்து விடுவது நல்லது. மாற்று பானத்தை தேர்ந்தெடுப்பது சிறப்பானது.