சென்னை: இயற்கை நம்மை சுற்றிலும் மருத்துவக்குணங்கள் கொண்ட பொருட்களை வைத்துள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். சீதபேதி குணமாக, ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து, மூன்று வேளை கொடுக்க குணமாகும்.
பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.