சென்னை: பழுத்த பப்பாளியில் வைட்டமின்கள், என்சைம்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் நிரம்பியுள்ளது. இதேபோல் பச்சை பப்பாளியில், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பி ஆகிய சத்துக்களின் வளமான ஆதாரம் உள்ளது. பப்பாளிக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதிலிருந்து சில மட்டும் உங்களுக்காக:
உடல் எடையை குறைக்க உதவுகிறது: பழுத்த பப்பாளியைவிட பச்சை பப்பாளியில் அதிக செயலில் உள்ள நொதிகள் உள்ளன. இதில் சக்திவாய்ந்த என்சைம்களான பாப்பைன் மற்றும் சைமோபாபைன் ஆகியவை உள்ளன. இந்த இரண்டு என்சைம்களும் நாம் உண்ணும் உணவில் இருந்து கொழுப்பு, புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடைக்க உதவுகின்றன.
உண்மையில், பெப்சினைக் காட்டிலும், கொழுப்பை உடைப்பதில் பாப்பேன் மிகவும் திறமையானதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க இந்த பச்சை பப்பாளியுடன் மிளகு சேர்த்து அருமையான பலனைப் பெறலாம்.
நீரிழிவு நோயை வெல்ல உதவும் பப்பாளிக்காய்: நீரிழிவு நோயாளிகள் பச்சை பப்பாளியை கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம். International Journal of Molecular Sciences என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பச்சை பப்பாளி சாறு பீட்டா செல்களை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் இன்சுலின் தொகுப்பை அதிகரிக்கிறது என்று தெரிகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: மற்ற நொதிகள் மற்றும் பைட்டோநியூட்ரியன்களுடன் பப்பேன் மற்றும் சைமோபபைன் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த சக்திவாய்ந்த கலவை உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.
மலச்சிக்கலை போக்க உதவுகிறது: நார்ச்சத்து அதிகம் உள்ள பப்பாளி மலச்சிக்கலை போக்க உதவுகிறது. பப்பாளியில் உள்ள என்சைம்கள், குறிப்பாக அதில் உள்ள லேடெக்ஸ் உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.
கோடெக்ஸ் வயிற்றுக்குள் பெரிஸ்டால்சிஸை மேம்படுத்த உதவுவதோடு, கழிவுகளை நகர்த்த உதவுகிறது. பச்சை பப்பாளியில் உள்ள அபரிதமான நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாகும்.