முட்டை என்பது உலகம் முழுவதும் மிகவும் பரவலாக உணவில் பயன்படுத்தப்படும் ஒரு சத்துள்ள பொருள். இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால், தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது தசை வளர்ச்சிக்கும், மூளை ஆரோக்கியத்துக்கும், கண் பாதுகாப்புக்கும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த அளவுக்கு சத்துகள் நிறைந்த இந்த முட்டையை நாம் பொதுவாக வீட்டில் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியே இச்செய்தி தொகுப்பு.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் முட்டையை அதிக நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது என்பதையே வலியுறுத்துகின்றனர். ஆனால் இந்தியாவில் பலரும் ஒரு முறையில் அதிக அளவு முட்டைகளை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, நாட்கள் கழித்து பயன்படுத்தும் பழக்கத்தில் இருக்கிறார்கள்.
முட்டையின் மேல் தோல் வலுவாக ஒட்டியிருக்கும் நிலையில் இருந்தால், அதைப் போனபடியே ஃபிரிட்ஜில் வைப்பது தவறானது. ஏனெனில், முட்டையின் வெளிப்புறத்தில் சால்மோனெல்லா பாக்டீரியா இருந்தால், அது அருகில் உள்ள மற்ற முட்டைகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது.
மேலும், முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் அந்த பாக்டீரியா அழிவதில்லை. அதே நேரத்தில், முட்டையின் உள்ளே அந்த பாக்டீரியா இருந்தாலும், அறை வெப்பத்தில் வைத்தாலும் அவை அழியாது. இதனால், முட்டையை வாங்கியவுடன் அதன் மேலே சேரும் மாசுகளை வெந்நீரால் கழுவி, அறை வெப்பத்தில் வைக்கலாம்.
அப்படியே ஃபிரிட்ஜில் வைக்க நேர்ந்தாலும், 7 நாட்களுக்குள் முட்டையை பயன்படுத்திவிட வேண்டும். முட்டையை பல நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருந்தாலும், வேகவைத்தால் அல்லது பொரித்தால் அதில் இருக்கும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாவை வெப்பம் அழிக்க வாய்ப்பு உள்ளது.
ஆகையால் முட்டையை அதிகமாக வாங்கி நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துவது ஏற்றது அல்ல. அதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு தேவையான அளவு மட்டுமே வாங்கி, வாடகையாக சாப்பிடுவது மிகவும் பாதுகாப்பானதும், ஆரோக்கியமானதும் ஆகும்.
இன்றைய வாழ்க்கை முறை ஏற்கனவே பல உடல்நலச் சிக்கல்களால் சவாலாக உள்ளது. அதில் உணவுக்கூறுகளைச் சரியாக நிர்வகிக்காத நிலை, மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் முட்டையை பாதுகாப்பாக வைத்திருக்கும் முறையை தெரிந்து, அதை சுகாதார முறையில் சாப்பிடுவது அவசியமாகிறது.