கரூர்: கரூரில் தவெக நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் விஜய் கரூர் வந்திருந்தபோது இருவரும் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில், அவர் கரூரை விட்டு சென்ற பிறகு இரு தரப்பினரும் தனித்தனியாக செயல்படத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
அமராவதி பழைய பாலம் தொடர்பாக மாநகராட்சி ஆணையரை எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்தபோது தவெக நிர்வாகிகள் உடன் செல்லாதது, காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் கட்சி அலுவலக திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இரு தரப்பினரும் தனித்தனியாக செயல்பட்டது ஆகியவை கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உரசலை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கரூர் இடைத்தேர்தலில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினரிடையே அதிகரித்துள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முக்கிய கட்சிப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு முதல்வர் விஜய்யின் முடிவைப் பொறுத்தே இருக்கும் என அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மதியழகன் தரப்பில், யாரையும் ஒதுக்கவில்லை என்றும், முதல்வர் யாருக்கு வாய்ப்பு வழங்கினாலும் அவருக்காக பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
