சென்னை: சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டசபை தொடங்கியதுமே இன்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அவை காவலர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வினர் பேச தயாராக இல்லை. சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை.
சட்டசபை மரபு மற்றும் விதிப்படி அ.தி.மு.க.வினர் நடந்து கொள்ளவில்லை. அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள கூடாது என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் என்றார்
இதனிடையே, அவை முன்னவர் துரைமுருகன் கூறுகையில், கள்ளக்குறிச்சியை பற்றி தைரியமாக சபையில் பேசி இருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மலிவான விளம்பரத்தை தேடுகிறார் என கூறினார்.