சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவகாரம் மீண்டும் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் SIR நடவடிக்கையால் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
இதனிடையே திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், ராகுல் காந்தியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் அரசுக்கு எதிராக மக்கள் போராடுவதற்கு உரிமை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் SIR விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்தும், காங்கிரஸுடனான அரசியல் உறவு குறித்தும் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
