புதுடில்லி; தமிழகத்துக்கான கட்சித் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
பா.ஜ., மாநிலத் தலைவர்கள், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை கட்சி தேசிய தலைமை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு;
குஜராத் – மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ், கர்நாடகா – மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், உத்தரப்பிரதேசம் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பீகார் – மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார், மத்திய பிரதேசம் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
தேர்தல் அதிகாரிகள்; ஆந்திரா – பி.சி. மோகன், அருணாச்சல பிரதேசம் – சர்பானந்தா சோனாவால், அசாம் – கஜேந்திரசிங் ஷெகாவத், சண்டிகர் – வினோத் டாவ்டே, தாத்ரா நகர் ஹவேலி டாமன் டையூ – ராதாமோகன் தாஸ் அகர்வால், ஹரியானா; புபேந்திர யாதவ், ஹிமாச்சல பிரதேசம் – ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் – சஞ்சய் பாட்டியா, கேரளா – பிரகலாத் ஜோஷி, லடாக் – ஜெய்ராம் தாகூர்.
லட்சத்தீவுகள் – பொன். ராதாகிருஷ்ணன், மேகாலயா – ஜார்ஜ் குரியன், அந்தமான் நிகோபர் தீவுகள் – தமிழிசை சவுந்தரராஜன், மிசோரம் – வானதி சீனிவாசன், நாகலாந்து – முரளிதரன், ஒடிஷா – சஞ்சய் ஜெய்ஸ்வால், புதுச்சேரி – தருண் சிங், ராஜஸ்தான் – விஜய் ரூபானி, சிக்கிம் – கிரண் ரிஜிஜூ, தமிழகம் -ஜி. கிஷன் ரெட்டி, தெலுங்கானா – ஷோபா கரண்டல்ஜே, திரிபுரா – ஜூவல் ஓரம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.