மத்திய பிரதேசம்: காலில் விழக்கூடாது… திக்மார்க் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் தன்னை பார்க்க வருபவர்கள் யாரும் தனது காலில் யாரும் விழ கூடாது என்று மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் திக்மார்க் மக்களவை தொகுதியில் வென்று மத்திய அமைச்சரானவர் வீரேந்திர குமார். 1996 ஆம் ஆண்டிலிருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வரும் வீரேந்திர குமார் இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் தோல்வியை சந்தித்ததில்லை.
1996 ஆம் ஆண்டு சாகர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி. ஆன வீரேந்திர குமார் 2009, 2014, 2019, 2024 ஆகிய 4 மக்களவை தேர்தலிலும் திக்மார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், திக்மார்க் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் தன்னை பார்க்க வருபவர்கள் யாரும் தனது காலில் யாரும் விழ கூடாது என்று வீரேந்திர குமார் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
மேலும், “யாரவது எனது காலை தொட்டு வணங்கினால் அவர்களுக்கு எந்த வேலையும் யாரும் செய்து தரக்கூடாது” என்று வீரேந்திர குமார் கறாராக உத்தரவிட்டுள்ளார்.
பாஜக அரசின் அமைச்சரவையின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருக்கும் வீரேந்திர குமார், சமூக நீதியின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.