சென்னை : 3 பேரின் ராஜினாமாவும் ஏற்பு… சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 3 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்“மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகிய 3 பேர் இன்று முதல் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர்.
விதிகளுக்கு உட்பட்டு 3 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டது.. எம்.எல்.ஏ பதவி விலகும் போது அதற்கான காரணத்தை கூற வேண்டியது இல்லை.. ராஜினாமா கடிதம் முறையாக இருக்கிறதா..? இல்லை என்பதை பார்க்க வேண்டியது தான் எனது பணி.
அதிமுகவின் சட்டமன்ற தலைவர் குறித்து இரு தரப்பினரும் மனு அளித்துள்ளனர், ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை.. அதிமுகவினரின் மனுக்கள் குறித்து விதிகளின் படி நடவடிக்கை எடுப்பேன்..” என்று தெரிவித்தார்.