புதுடெல்லி: வரும் அஞ்சாம் தேதி புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்.5ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு நடைபெற்ற பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது. தோல்வி விரக்தியில் இப்போது வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்எல்ஏ மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலை கண்டிக்கிறோம்” என்றார்.
இந்த தேர்தலை ஒட்டி பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் ஆம் ஆத்மியும் செயல்பட்டு வருகிறது.