சென்னை: நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர். தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த உடன் தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுப்பதற்கான கோப்பில் முதல்வர் விஜய் கையெழுத்து இட்டார்.
இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானர்களுக்கு நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்பு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.