புதுடில்லி: தீவிரவாதிகள் அழியும் வரை எங்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் என்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுவெளியில் பேசியுள்ளார்.
தீவிரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம் என்று சூளுரைத்த அவர், பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது; பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் உலக அளவில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது. அதற்கேற்ப எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.