சென்னை : சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவால் அமைச்சர் பொன்முடிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஏற்கெனவே, இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஒருவேளை போலீசார் வழக்குப்பதிவு செய்தால், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுக்கும்.
இது தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு பெரும் நெருக்கடியாக மாறும். அமைச்சர் பொன்மொழியின் சர்ச்சைக்குரிய பேச்சு மிகப் பெரிய கண்டனங்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.