சென்னை: காவிரி டெல்டா பாசனப் பகுதியில் திருமுட்டம் பகுதியை சேர்ப்பது தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டப் பேரவையில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் காட்டுமன்னார் கோவில் தொகுதி உறுப்பினர் சிந்தனைச் செல்வன், திருமுட்டம் பச்சன் பகுதியை மீண்டும் டெல்டா பாசனப் பகுதிக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இது தொடர்பான கருத்தை அரசு ஏற்கலாம் என்றும், இதற்காக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வீராணம் ஏரியை தூர்வாருவது குறித்த கேள்விக்கு, தற்போதைய சூழலில் 277 கோடி தேவைப்படுகிறது.
அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப வீராணம் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என துரைமுருகன் உறுதியளித்தார்.