சென்னை: இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், தேமுதிக திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் உறுதியாகி உள்ளன. ஆனால் தேமுதிக சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சாதகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலிலேயே இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டு அரசியலில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணையவுள்ளது. கடந்த தேர்தலில் எம்பி பதவி தருவதாக கூறி, அதிமுக ஏமாற்றியதாக தேமுதிக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடதக்கது.