May 2, 2024

விதிமுறைகளை மீறிய திமுக… அதிமுக கொடுத்த புகார்

நாமக்கல்: புரொஜெக்டர் பயன்படுத்தி நடுரோட்டில் தி.மு.க விளம்பரம் செய்கிறது. இது தேர்தல் விதிகளை மீறிய ஒன்று என அ.தி.மு.கவினர் புகார் செய்துள்ளனர். நாமக்கல் பரமத்தி சாலையில் இயங்கி வரும் ஒரு உணவகத்திலிருந்து ப்ரொஜெக்டர் மூலம் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை சாலையில் ஒளிர விட்டனர். முறையான அனுமதி பெறாமல், சின்னத்தை ஒளிரவிட்டதாக அதிமுகவினர் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளித்தனர். விரைந்து சென்ற போலீசார், புரொஜெக்டரை அணைத்து, உணவக நிர்வாகத்தினரை எச்சரித்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]