திமுக பரப்புரை தொடக்கம்… முதல்வர் ஸ்டாலின் பதிவு
சென்னை: தொடங்கியாச்சு பரப்புரை… மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக பரப்புரையைத் தொடங்கியிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும். பாசிசம் வீழும். #INDIA வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.