இந்தியா மற்றும் ரஷ்யா இடையே பாதுகாப்புத் துறையில் நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா–ரஷ்யா அரசுகளுக்கு இடையிலான ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குழுவின் கூட்டத்தில் கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது முக்கிய நோக்கமாக உள்ளது.
