ஆளுநர் உரையை விமர்சிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட பதிவில், நடப்பாண்டுக்கு பதிலாக கடந்த ஆண்டின் விவரங்களை குறிப்பிட்டதால் திமுக ஐடி விங் மீது கட்சி தலைமையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியாளர்களின் சமூக வேடம் கலைகிறது என விமர்சிக்க முயன்ற நிலையில் ஏற்பட்ட இந்த தவறு, கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசர குடுக்கை போன்று செயல்படும் ஐடி விங் அமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்ற ஆலோசனையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.