சென்னை : சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டப்பட்டுள்ளது. என்று மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
மாநகர் முழுவதும் 19000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் 425 இடங்களில் தடுப்புகள் அமைத்து சிறப்பு கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாப்பட்டது. இருப்பினும் எவ்வித விபத்துக்களாலும் உயிரிழப்புகள் இல்லை என்று போலீசார் தரப்பில் அறிவித்துள்ளனர்.