ஊட்டி: ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில், சயான் உட்பட, 10 பேரை, போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் 49 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு நீலகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பிறகு; கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ் உதகை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
சிபிசிஐடி கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கை செப்டம்பர் 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.