திருவண்ணாமலை: விழிப்புணர்வு பேரணி… திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தாா்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலையை அடுத்த சம்பந்தனூரில் இயங்கும் ரங்கம்மாள் காது கேளாதோா் மேல்நிலைப் பள்ளி, அறிவுத்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளி மற்றும் ரங்கம்மாள் மெமோரியல் ரிஹாபிளிடேஷன் சொசைட்டி இணைந்து இந்தப் பேரணியை நடத்தியது.
வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட என்ற தலைப்பில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளித் தலைவா்,மற்றும் மாவட்ட அரசு வழக்கறிஞர் புகழேந்தி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இராம் பிரதீபன், வட்டாட்சியா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிடும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.