By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?
    1 Min Read
    சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்
    2 Min Read
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள்
    1 Min Read
    ஊட்டசத்து மிகுந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும் இடத்தில் சர்ச்சை..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும் இடத்தில் சர்ச்சை..!!
தமிழகம்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும் இடத்தில் சர்ச்சை..!!

admin
Last updated: February 5, 2025 10:08 am
By admin 2 Min Read
Share
SHARE

கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளி சிறை இருந்த இடத்தில் சுமார் 20.72 ஏக்கர் நிலப்பரப்பில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. கோவையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நகரின் முக்கிய பசுமைப் பகுதியான திறந்தவெளி சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்களை கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்காக அழிக்கப் போவதாக பசுமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு. பழனிசாமி கூறுகையில், “1981-ல், ஒண்டிப்புதூரில், 30 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கப்பட்டது. இங்கு தற்போது 950 தென்னை மரங்கள் உள்ளன. மேலும் சில மரங்களும் உள்ளன. மேலும், பல ஏக்கரில் காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளன. கிரிக்கெட் மைதானம் கட்டுவதால் இங்குள்ள விவசாய உள்கட்டமைப்பு பாதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த இடத்திற்கு பதிலாக நீலம்பூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட எந்த பகுதியில் மைதானம் அமைத்தால், யாருக்கும் பாதிப்பு இல்லை; கோவையின் பசுமை பாதிக்கப்படாது. இதுகுறித்து கோவை நகர மாவட்ட திமுக செயலாளரும், சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் பேசுகையில், ”கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் விளையாட்டுத் துறையில் கோவை அடுத்த கட்டத்துக்கு முன்னேறும்.

விளையாட்டுத் துறையில் கோவைக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும். மைதானம் கட்டினால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த இடம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அதனால், கோவையின் பசுமைச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியோ கூறுகையில், ”திறந்தவெளி சிறை வளாகத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது. அங்குள்ள மரங்களை வெட்டும்போது அதற்கு ஈடாக லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு கோவையின் பசுமையான சூழல் பாதுகாக்கப்படும். கிரிக்கெட் மைதானத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தயாரித்து வருகிறது. மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அரசு ஒப்புதல் அளித்த பின், அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார். தங்க நாற்கர சாலைத் திட்டத்துக்காக நூற்றாண்டு பழமையான மரங்களை வெட்டி நடுரோட்டில் பூச்செடிகள் போடுவது போல் அல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும்!

You Might Also Like

வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி

நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?

சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள்

ஊட்டசத்து மிகுந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி?

TAGGED:ControversyCricket Stadiumimportantமைதானம்ஸ்டேடியம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?