மதுரை: மதுரையில், பில்லில் இருக்கும் எண்ணிக்கையில் பால் பாக்கெட்டுகளை இறக்காமல், ஒன்றிரண்டு பால் பாக்கெட்டுகளை குறைத்து வைத்து, ஆவின் ஊழியர்கள், ஓட்டுநர்கள் நூதன மோசடியில் ஈடுபடுவதாக, ஆவின் பால் டெப்போ உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் உள்ள ஆவின் முகவர் ஒருவர், தமக்கு வைக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியபோது, ஆவின் பால் வாகன ஓட்டுநர் பதிலளிக்க முடியாமல் திணறும் காட்சி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு ஒரு டெப்போவிற்கு இரண்டு பால் பாக்கெட்கள் எடுத்தார்கள் என்றால் 50 ஆயிரம் டெபோக்களுக்கு ஒரு லட்சம் பால் பாக்கெட்டுகள் லஞ்சமாக எடுக்கப்படலாம் என ஆவின் பால் முகவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில், மாதத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு கையாடல் நடப்பதாகவும், அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆவினில் நடைபெறும் இந்த நூதன ஊழல் முறைகேட்டை முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பால் டெப்போ உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.