சென்னை : பாதாம், முந்திரி, வால்நட் போன்றவற்றை இரவில் ஊறவைத்து சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ்களில் பி-வைட்டமின்கள், ஃபோலேட், வைட்டமின் ஈ உள்ளன. இந்த சிறிய ஃபுட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும்.
இந்த நட்ஸ்களை ஊறவைத்து சாப்பிடும் போது ஊட்டச்சத்துக்கள் உடலால் நன்றாக உறிஞ்சப்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் ஊற வைத்து சாப்பிட்டால் அஜீரண கோளாறு ஏற்படாது.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அள்ளித்தரும் இந்த பாதாம், வால்நட் போன்றவற்றை அதிகளவிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.