சென்னை : தமிழகத்தில் வரும் ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை காலம் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது. வ.விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வருவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இதனால் ராமநாதபுரத்தில் மட்டும் சுமார் 2000 படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது. இந்த மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்கள் தங்களின் படகுகள், வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை சீரமைப்பு பணியில் ஈடுபடுவர்.
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.